திருச்சியில் பயிற்சி டாக்டர்கள் திடீர் தர்ணா

0

திருச்சி அரசு தலைமை மkருத்துவமனையில் 150 பயிற்சி டாக்டர்கள் பணியில் உள்ளனர்.. கடந்த 2015-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை தொடங்கிய இவர்கள், 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்களாக பணியாற்றி வந்தனர்.

கொரோனா காலக்கட்டத்திலும் தங்களது பணியை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கான பயிற்சி  மார்ச் 27-ந் தேதியுடன் முடிவடைந்தது.

சந்தா 2

இதற்கிடையே மருத்துவக்கல்வி இயக்குனரகம் பயிற்சி டாக்டர்களாக தொடர்ந்து பணியாற்ற நேற்று புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை பயிற்சி டாக்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தங்களை டூட்டி டாக்டர்களாக பணி அமர்த்தி சம்பள வரன்முறை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 31ம் தேதி பயிற்சி டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

‌சந்தா 1

பயிற்சி டாக்டர்களாக பணியாற்றும் காலக்கட்டத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகையை அரசு வழங்கி வருகிறது. அதில் 3 மாத நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் பணியாற்றும்போது 2 மடங்கு ஊதியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டநிலையில் அதுவும் வழங்கப்படவில்லை..பயிற்சி முடித்ததற்கான சான்றிதழும் வழங்கப்பட வில்லை. பயிற்சி டாக்டர்களாக தொடரும் பட்சத்தில் எங்களை புரோமட் செய்து டூட்டி டாக்டர்களாக பணியமர்த்த வேண்டும். அதுவரை தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்..

Leave A Reply

Your email address will not be published.