திருச்சியில் 6கிலோ தங்கச்சங்கிலிகள் பறிமுதல்

0
1

கடந்த 31ம் தேதி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி பீட்டர் லியோனார்ட் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரவேல், ஏட்டு அழகர்சாமி மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுவினர்  திருச்சி பெரியகடைவீதி பகுதியில் வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி நடத்திய சோதனையில்,  மொத்தம் 5 கிலோ 961 கிராம் எடை கொண்டதாக இருந்த தங்கச்சங்கிலிகளை பறிமுதல் செய்தனர்.அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியே 51 லட்சத்து 10 ஆயிரத்து 342 ரூபாய் ஆகும்.

அவை திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றிற்கு சொந்தமானது. அதற்கு உரிய ஆவணங்களோ, ரசீதோ எதுவுமில்லை.இதனைத் தொடர்ந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, உடனடியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கமலக்கண்ணன், தாசில்தார் குகனிடம் ஒப்படைக்கப்பட்டது.  அவர்கள் அதனை சீல் வைத்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.