காந்தி மார்க்கெட் நவீன வசதிகளோடு அதே இடத்தில் செயல்படும் ; திமுக மேற்கு, கிழக்கு வேட்பாளர்கள் உறுதி !

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் திமுகவின் மேற்குத் தொகுதி வேட்பாளர் கே என் நேரு மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வாக்கு சேகரித்தனர்.
அப்போது காந்தி மார்க்கெட் இதே இடத்தில் நவீன வசதிகளோடு செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதிமொழி வியாபாரிகள் முன் வைத்தார். மேலும் குளிர்பதன கிடங்கு அமைத்து தரப்படும் என்று வியாபாரிகள் மத்தியில் பேசினார்.

திருவரம்பூரில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் மகேஷ் பொய்யாமொழி க்கு ஆதரவாக திண்டுக்கல் லியோனி, கே என் நேரு உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் சோழமாதேவி மங்கலம் பகுதியில் திமுகவினர் உடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அப்போது மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தருவதாக உறுதிமொழி அளித்தார்.
துறையூர் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் அபினிமங்கலம், புத்தனாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். காவிரி கூட்டுக் குடிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.
