தமிழகம் தொழில் நகரமாக வளர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதம் !

0
1

திருச்சி திருவரம்பூர் அதிமுக வேட்பாளர் ப.குமார் 64 வது வார்டு பகுதிக்குட்பட்ட பர்மா காலனி பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அந்த பகுதியில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் என்று பல்வேறு தரப்பினரை சந்தித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு புறம்போக்கு இடங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு, வீடுகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்காளர்கள் மத்தியில் உறுதிமொழி அளித்தார்.

 


முசூறி அதிமுக வேட்பாளர் செல்வராசு தொகுதிக்குட்பட்ட தாத்தையங்கார்பேட்டை பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கரையோரப் பகுதிகள் பலப்படுத்தப்பட்டு ஏரிகள் தூர்வாரப்படும் என்று வாக்காளர்கள் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.

மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக திருவள்ளரை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அம்மாவின் அரசு தொடர்ந்து மக்கள் நலனுக்காக செயல்படும், மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் வேட்பாளர் பரஞ்சோதி.

2

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்‌. அப்போது பேசிய வெல்லமண்டி நடராஜன் அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு அதிகமாக இருந்தது. அதிமுக அரசு பதவியேற்ற உடனே உபரி மின்சாரம் செய்யும் மாநிலமாக தமிழ்நாடு முன்னேறியது. மேலும் தொழில் வளர அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.