திருச்சி மாவட்டம் முழுக்க திமுகவினர் பிரச்சாரம் !

0
1

திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளர் கே என் நேருவின், தம்பி ராமஜெயத்தின் 9வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா காலத்திற்கான நிவாரண நிதியாக தமிழக அரசின் சார்பில் திமுக ஆட்சி அமைத்த உடன் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் 4000ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.

2

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் நிறைவேற்றப்படும். அனைத்துத் தரப்பு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் கதிரவனுக்கு திமுகவின் முதன்மை செயலாளர் கே என் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது மகளிர் சுய உதவி குழுவின் கடன் தள்ளுபடி செய்யப்படும். நகை கடன் தள்ளுபடி, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட திமுக வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துரைத்தார்.

திருவரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கே.என். சேகரன் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் என்று ஏராளமானோர் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.