ஏழைகளின் நலனை பாதுகாக்க அதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள் திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரம் !

0

மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி தத்தமங்கலம், தேவிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த ஆட்சி தொடர இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் பெண்களுக்கு மாதம் 1500 வழங்கப்படும், மேலும் 6 வருடம் ஆறு சிலிண்டர்கள் இலவசம் என்ற வாக்குறுதியையும் பெண்களிடத்தில் எடுத்துரைத்தார்.

துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி மலைவாழ் பகுதி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலை வசதி, ரேஷன் கடை வசதி என்று பல வசதிகள் கண்டிப்பாக அமைத்துத் தரப்படும். மலைவாழ் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

food

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவினர் உடன் சென்று வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்போது பெண்களை தெய்வமாக மதித்த எம்ஜிஆர் ஜெயலலிதா இவர்கள் வழியில் தமிழக முதலமைச்சரும் இருக்கிறார். ஆனால் இன்று அவருடைய தாயை திமுகவின் ராசா அவதுறு பேசியிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

திருச்சி திருவரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குமார் கைலாஷ் நகர், பிரகாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் திருச்சியின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறினார்.

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாய மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது விவசாயிகளின் நலன் காக்க இந்த அரசு தொடர்ந்து செயலாற்றும், அதற்கு நீங்கள் மீண்டும் இரட்டை இலையை தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.