திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத் துறையில் தேசியக் கருத்தரங்கு

0

திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத் துறையில் தேசியக் கருத்தரங்கு

திருச்சி தூய வளனார் கல்லூரியில் தமிழ் இலக்கியங்களில் வேளாண்மை என்ற மையப்பொருளில் இயங்கலையில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது.

‌சந்தா 1

இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக்கருத்தரங்கில் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் தலைமை வகித்தார். அகத்தர உறுதிப்பிரிவுப் புலத்தலைவர் முனைவர் ரோஸ் வெனிஸ் வாழ்த்துரை வழங்கினார்.

சந்தா 2

பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் செல்வம் ஆய்வுக் கோவையை வெளியிட்டு தொடக்க உரையாற்றினார். தம் தொடக்க உரையில் தமிழர்களின் வேளாண்மை அறிவு உலக அரங்கில் போற்றத்தக்கது. எல்லா காலகட்டத்திலும் இலக்கியங்கள் இந்த உண்மையை பதிவுசெய்து இருக்கின்றன என்பதற்கான சான்றுகளை எடுத்துக்கூறி இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருக்கிற கல்லூரித் தமிழாயவுத்துறையைப் பாராட்டினார். முனைவர் நல்லமுத்து நன்றியுரையாற்றினார். தொடக்கவிழா நிகழ்வுகளை முனைவர் ஜா.சலேத் தொகுத்து வழங்கினார்.

 

தொடர்ந்து பேராசிரியர் இ.சூசை மற்றும் பேராசிரியர் டெல்மா அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் பல்வேறு ஆய்வாளர்கள் தமிழ் இலக்கியங்களுள் வேளாண்மை பெற்றுள்ள இடம் குறித்தத் தம் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

 

கல்லூரிச் செயலர் அருள்முனைவர் செ.பீட்டர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் இணைமுதல்வர் வி.அலெக்ஸ் ரமணி வாழ்த்துரை ஆற்றினார். திருச்சி வணிக வரித்துறை துணை ஆணையர் கவிஞர் சு.தேன்மொழி மாணவர்களின் கருத்தரங்கக் கட்டுரைகள் அடங்கிய வளன் ஆயம் ஆய்விதழை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கச் செயலர் முனைவர் சி.ஷகிலாபானு நன்றியுரையாற்றினார். நிறைவு விழா நிகழ்வுகளை முனைவர் ம.தனலட்சுமி தொகுத்து வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.