தலைவர் முதல்வராவார், கேட்டதெல்லாம் நடக்கும் ; கே.என்.நேரு பிரச்சாரம் !

0
1

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே என் நேரு 55வது வார்டு, குறத்தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வீடு வீடாகச் சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரித்த நேரு பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். திருச்சி மேற்குத் தொகுதி தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும். தலைவர் முதல்வராவார், கேட்ட தெல்லாம் நடக்கும் என்று கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

திருச்சி கிழக்குத் தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது திருச்சி பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள நானா முன பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை முடித்து வந்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

2

திருவரம்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது செங்கல்லில் எய்ம்ஸ் என்று எழுதி மதுரையில் கட்டப்பட்ட இது தான் இதைக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி இருக்கின்றனர் என்று மக்கள் மத்தியில் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் பழனியாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.