ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் திருச்சி கலெக்டரிடம் மனு

0

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் 25ம் தேதி திருச்சி மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கடின நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் தேர்தல் பணியில் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், மருத்துவ விடுப்பு எடுத்தவர்களையும் புற்றுநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்களை தேர்தல் பணி பட்டியலில் சேர்த்து இருக்கின்றனர் என்றும், உண்மையான காரணங்களுக்காக தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 17 ஏ விதிப்படி தண்டனை வழங்குவதை தவிர்த்து எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படாத என உறுதியளித்தார்.இதனைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.