திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரத்த தானம் விழிப்புணர்வு முகாம்:

0

திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரத்த தானம் விழிப்புணர்வு முகாம்:

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரத்த தானம் விழிப்புணர்வு முகாம் இன்று (26.03.2021) காலை 11.00 நடைபெற்றது.

‌சந்தா 1

இந்நிகழ்வு மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம் தலைமையிலும், மக்கள் சக்தி இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் வெ. இரா.சந்திரசேகர் , துறையூர் பகுதி மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் ஆசிரியர் ந.கண்ணன், மே.க.கோட்டை எஸ். ஈஸ்வரன், பொன்மலை என்.தயானந்த் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இம்முகாமை திருச்சி காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் தொடங்கி வைத்தார்.‌‌ அவருடன் டாக்டர் வளர்மதி, செவிலியர்கள் சாந்தி மகாலட்சுமி, பாலசந்திரன், ரங்கன், ராமசாமி, வாசு, சின்ன பொண்ணு , காளியம்மா, கோடீஸ்வரி, மற்றும் பலர் ரத்ததான முகாமுக்கு வந்து சிறப்பித்தார்கள்.

சந்தா 2

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பேரணி, ரங்கோலி கோலம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. அதேபோல மாணவர்களும் பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.  அந்த வகையில் வித்தியாசமாகவும் மற்றும் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் 45 பேர் மேல் ரத்த தானம் வழங்கி பொது மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது.

இதில் தொடர்ந்து ரத்தம் பல முறை வழங்கிய பண்பாளர்கள் எம். சரவணன், வி.சந்தன பாரதி, என்.கண்ணன் (81வது) முறையாகவும் ரத்த தானம் வழங்கியவர்கள் .‌ மக்களால் மக்களுக்காக செயல்படுபவை தேர்தலும் அரசாங்கமும். ஆனால், வெறும் பார்வையாளர்களாக இருந்து குறை மட்டும் சொல்லாமல் ஜனநாயகத்தை சீர்படுத்த நீங்களும் களம் இறங்க வேண்டிய காலம்.

இன்று இளைஞர்கள் பலரும் வாக்களிப்பதில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். ஆனால், இளமையை மட்டுமில்லாமல் உங்கள் எதிர்காலத்தையும் சேர்த்து யோசியுங்கள். வாக்களிப்பது உங்களது ஜனநாயகக் கடமை. நீங்கள் எடுத்த முடிவு உங்கள் எதிர்கால அரசின் மூலம் வெளிப்படும். இதனால், இந்த ஒரு காரணத்துக்காக இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்திலும் பல நாடுகளில் அந்நாட்டு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அந்நாட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை. காரணம், அவர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. நமது முன்னோர்கள் போராடி பெற்ற உரிமைதான் வாக்களிக்கும் உரிமை. இந்த உரிமையை நாம் பாராட்டி நாமாகவே முன்வந்து நம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். வாக்காளர் விழிப்புணர்வு வாக்களிப்போம் சமூகக் கடமையாற்றுவோம் என்ற அடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டது.

எனது வாக்கு எனது உரிமை என் வாக்கு விற்பனைக்கு இல்லை உள்ளிட்ட விழிப்புணர்வு‌ வாசகங்களுடன் பொது மக்களிடை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயலாளர் , கலைக்காவிரி நுண்கலை கல்லூரி உதவிப் பேராசிரியர் கி. சதீஷ்குமார் மாணவர்கள் மதன், ஆகாஷ், மணிகண்டன், கலைவாணன், இன்பன், பிரகாஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.