திருச்சி அருகே திருவிழாவிற்கு கணவர் வராததால் பெண் தற்கொலை

0

திருச்சி, தென்னூா், காவல்காரன் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன்-சரளா தம்பதியின் மகள் அனிதா (26). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த அருண்குமாருக்கும் கடந்த பிப். 23 இல் திருமணம் நடந்தது.  சென்னை தனியார் நிறுவன ஊழியரான அருண்குமார் அண்மையில் நடைபெற்ற தென்னூா் உக்கிரமாகாளி கோயில் விழாவுக்கு வர இயலவில்லை. இதனால்  கடந்த மார்ச் 18 ஆம் தேதி டெலிபோனில்  அழைத்த அனிதா திருவிழாவிற்கு வருமாறு கூறியுள்ளார்..

தன்னால் விடுமுறை எடுக்க இயலாத நிலை உள்ளதாகவும், அதனால் வர இயலாது எனவும், அருண்குமார் தெரிவித்துள்ளார்..

சந்தா 2

இதனால் விரக்தியடைந்த அனிதா விஷம் குடித்துள்ளார்.

‌சந்தா 1

இதையடுத்து அக்கம் பக்கத்தினரால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி 23ம் தேதி இறந்தார்.

இச்சம்பவம் குறித்து மகளிர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.