திருச்சியில் 100வீத வாக்களிப்பை எட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி 

0
1

திருச்சியில் 100வீத வாக்களிப்பை எட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, இந்திரா கணேசன் கல்வி குழுமம் ,ஆத்மா மருத்துவமனை, யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் இணைந்து தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021 முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பை எட்ட திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நீங்கள் தேர்தலின் சக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியது. 

2
4

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை தலைவர் ராஜசேகரன் ,செயலாளர் ஜவஹர், திருச்சி மேற்கு வட்டாட்சியர் ரமேஷ், ஆத்மா மருத்துவமனை பொது மேலாளர் சாலை குமரன், யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனர் தலைவர் மோகன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை இணை செயலர் எழில்,மேலாண்மை குழு உறுப்பினர் செல்வராஜ்,வழிகாட்டு குழு உறுப்பினர் எட்மண்ட் வில்லியம், லாரன்ஸ், விஜயகுமார், வில்பர்ட் எடிசன், குணா உட்பட பலர் பங்கேற்றனர்.

வாக்கு என்பது ஒரு குடியரசின் சக்தி அனைத்து வாக்காளர்களும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் உங்கள் ஆட்சியாளரை தேர்ந்தெடுங்கள் நீங்கள் தேர்தலில் சக்தி தேர்ந்தெடுப்பது உங்கள் விருப்பம் ஆனால் வாக்கு முக்கியமானது ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும் நூறு சதவீத வாக்களிப்பை ஏற்றுவது எங்கள் குறிக்கோள் ஏப்ரல் 6 2021 தேர்தல் நாள் என கருத்துக்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதி ஏற்று கையொப்பமிட கோரினார்கள்

3

Leave A Reply

Your email address will not be published.