அடிக்கும் வெயிலில் அனல் பறக்கும் பிரச்சாரம் ; அதிமுக வேட்பாளர்கள் !

0

திருச்சி திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் தாஜ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

 

 

 

 

 

திருச்சி மணப்பாறை தொகுதி வேட்பாளர் சந்திரசேகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், டீக்கடைகளில் உள்ள வாக்காளர்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

துறையூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி தொகுதிக்குட்பட்ட அம்மாபட்டி, ஆதனூர், கொல்லப்பட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக அரசு பெண்களுக்கு செய்துள்ள பல்வேறு நலத் திட்டங்களை முன்வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

food

தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் மனோகரன், வழக்கறிஞர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மணச்சநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது பரஞ்சோதி மக்களுக்காக உழைப்பவர், 24 மணி நேரமும் மக்களின் அழைப்பை ஏற்று செயலாற்ற கூடியவர், மேலும் திருச்சி மலைக்கோட்டை, காவிரி ஆற்றை போல் பரந்த மனம் கொண்டவர் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வீர் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் பெரிய கடை வீதி பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் முன்னாள் துணைமேயர் சீனிவாசன், ஆவின் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.