துறையூரில் தேர்தல் பறக்கும்படையினரை கண்டித்து சாலைமறியல்

0
1

.துறையூரை அடுத்த சிறுநாவலூரை சேர்ந்த மளிகை வியாபாரியான செல்வகுமார்.,துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மளிகை கடைகளில் சாமான்கள் கொடுத்துவிட்டு, பின்னர் பணத்தை வசூல் செய்வது வழக்கம். அதுபோல் கடந்த 22ம் தேதி ரூ.92 ஆயிரம்பணத்தை வசூல் செய்து கொண்டு வந்து அவரை ,செட்டிகுளம் அருகே ,தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்ததுடன்,, அவர், ஆவணங்களை காட்டியும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால்துறையூர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் காமராஜ் தலைமையில்  பறக்கும்படை அதிகாரிகளை கண்டித்து, துறையூரில் கடையடைப்பு போராட்டம் நடந்தியதுடன்,  துறையூர் பஸ்நிலையத்தில் வியாபாரிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய ஆவணங்கள் எது என்பதை விளக்கிக் கூறியும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.

2

தகவல் அறிந்த துறையூர் போலீசார், துணை தாசில்தார் ஜாபர் சாதிக் அனைத்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள் கலைந்து சென்று தாலுகா அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்தனர்.

இச்சம்பவத்தால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

 

3

Leave A Reply

Your email address will not be published.