திருச்சியில் திமுகவின் வாக்குறுதியை கூறி வாக்கு சேகரித்த கனிமொழி !

0
1

திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு 58வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் 58 வது வார்டில் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது கே.என்.நேரு விற்கு ஆதரவாக எம்பி கனிமொழி திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்று திமுக அளித்த பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் அதிமுக ஆட்சியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று விமர்சித்தார்.

மேலும் பிரச்சாரத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, நகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் இளங்கோ, காங்கிரஸ் கட்சியின் ஜவகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுரேஷ், இப்ராஹிம் என்று பலர் கலந்து கொண்டனர்.

2

ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பழனியாண்டி பேசுகையில் ஸ்ரீரங்கத்திற்கும் பாசத்திற்கும் பணத்திற்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. தேர்தல் இதில் பணத்தை தோற்கடித்து, மக்கள் பாசக்காரனாகிய எண்ணை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உருக்கமாக பேசினார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜிற்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மாங்கா அமைச்சரை வீட்டுக்கு அனுப்பி மக்களுக்கான வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற செய்ய மக்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.


மேலும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இனிகோ இருதயராஜ் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி திருவரம்பூர் தொகுதியில் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புறாவைப் பறக்க விட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.