திருச்சியில் அதிமுக வேட்பாளர்களின் தீவிர பிரச்சார சுற்றுப்பயணம் !

0
1

திருச்சி மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக களமிறங்கியுள்ள பத்மநாபன் திருச்சி மிளகுபாறை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்‌. மேலும் வெற்றி நடைபோடும் நல்லாட்சி மீண்டும் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேட்பாளர் மக்களிடம் கோரிக்கை வைத்தார்.

பிரச்சாரத்தில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வனிதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

2

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பாலக்கரை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுகவினர் என்று பலர் பங்கேற்றனர். மேலும் இல்லத்தரசிகளுக்கு மாதம் மாதம் 1500 வழங்கப்படும். வருடம் ஆறு சிலிண்டர் இலவசம் என்ற அதிமுகவின் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைத்தார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

திருவரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வாக்கு தொகுதி முழுக்க தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

தொகுதியில் நிறைவேற்றப்படாமல் உள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் மேலும் அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும். என்ற வாக்குறுதிகளை முன்வைத்து அதிமுக வேட்பாளர் ப.குமார் அரியமங்கலம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் விவசாயிகளிடம் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது மல்லிகை உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.

மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட நொச்சியம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.