திருச்சி மாவட்டத்தில் தபால் வாக்குக்கு 14,609 பேர் விண்ணப்பம் : ஆட்சியர் தகவல்

0

திருச்சி மாவட்டத்தில் தபால் வாக்குக்கு 14,609 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கடந்த 21ம் தேதி முதலாம்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு, 11 மையங்களில் நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள் மொத்தம் 15,398 பேருக்கு தபால் வாக்குகளை செலுத்த படிவம்-12 வழங்கப்பட்டது. இதில் 14,609 வாக்குப்பதிவு அலுவர்களிடமிருந்து படிவம்-12 பயிற்சி வகுப்பின்போது பெறப்பட்டது. அவற்றில் இதர மாவட்டங்களுக்குரிய படிவம்-12 (மொத்தம் 1,665) சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் பிற தொகுதிகளுக்குரிய படிவம்-12க்கான (மொத்தம் 12,944) தபால் வாக்குகள் அடுத்த பயிற்சி வகுப்பின்போது வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவராசு தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.