பெட்டவாய்த்தலை சாலையோரம் கிடந்த 1 கோடி ரூபாய்

0
1

அ.தி.மு.க.வை சேர்ந்த ரவிச்சந்திரன்(வயது 55), சத்தியராஜா(43), ஜெயசீலன்(46), சிவக்குமார்(36). இவர்கள் ஒரு காரில் திருச்சியில் இருந்து முசிறிக்கு பெட்டவாய்த்தலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் 2 கார்களில் வந்தவர்கள், காரில் இருந்து இறங்கி தகராறு செய்து கொண்டிருந்ததைனர். காரை நிறுத்தி விட்டு அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே ரோந்து வந்த போலீஸ் வாகனத்தை பார்த்ததும், தகராறு செய்தவர்கள் உடனே காரில் ஏறி தப்பிச்சென்றனர். வாகனத்தை நிறுத்திய போலீசார் அங்கு என்ன நடந்தது என்று விசாரிக்கும்போது தகராறு செய்து கொண்டிருந்த இடத்தில் ஒரு அரிசி சாக்கு மூட்டை கிடந்ததைப்பார்த்த ரவிச்சந்திரன் உடனே போலீசாரிடம் அதை கூறியுள்ளார்.

அந்த மூட்டையை பிரித்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அதில் 500 ரூபாய் கட்டுக்களாக ரூ.1 கோடி இருந்தது. தகவலறிந்த  ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து,பணத்தை கைப்பற்றி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

2

பணத்தை கண்டெடுத்த போது அங்கு காரில் இருந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்துக்கு வரவழைத்து, அந்த பணத்துக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று எழுதி வாங்கினார்கள். இந்த பணத்தை வீசியது யார் என விசாரணை செய்து வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.