திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு

0
1

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கடந்த 21ம் தேதி துவங்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிநவீன வாக்காளர் விழிப்புணர்வு வாகனத்தை 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார்.

Helios

அவர் அளித்த பேட்டியில், வேட்பு மனு 21ம் தேதி மாலை நிறைவு பெறுகிறது. அதன் பின்னர் தான் திருச்சி மாவட்டத்தில் எத்தனை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது, எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தெரியும். காரணம் ஒரே வேட்பாளரே 3 மனு, 4 மனு தாக்கல் செய்திருப்பார். மாற்று வேட்பாளரும் கொடுத்து இருப்பார்கள். இறுதியாகத் தான் எத்தனை வேட்பு மனு, வேட்பாளர்கள் என தெரியும்.

2

இந்த ஆண்டு மாற்று திறனாளிகளுக்கும், 80வயதுக்கு மேற்பட்டோருக்கும் புதிதாக தபால் வாக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 71,000 தகுதியான நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டதில், 6900 பேர் தபால் வாக்கு கேட்டுள்ளனர். அதற்கான வாய்ப்பு 16ம் தேதியோடு முடிந்து விட்டது. தற்போது இந்த 6900 பேருக்கு தபால் வாக்கு வழங்கப்படும். இதற்கான எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

21ம் தேதி வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட உள்ளது. அதில் இருக்கும் 16000 பேருக்கு போஸ்டல் பேலட் கொடுக்க இருக்கிறோம். அதனால் 24ம் தேதி தான் எத்தனை பேர் தபால் வாக்குகள் போட உள்ளனர் என தெரியவரும் என்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.