உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன், மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவர் தீக்குளிப்பு

0

திருச்சி ,உப்பிலியபுரம் ,வைரிசெட்டி பாளையத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வராஜ்,  தனது மனைவி மற்றும் மகன்கள் வயது 8 மற்றும் 6. இவர்கள் கடந்த டிசம்பர் மாதம், வீட்டை விட்டு சென்று விட்டதாகவும். இது குறித்து, செல்வராஜ், உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

சந்தா 2

4 மாதங்கள் ஆகியும், இதுவரை மனைவி மற்றும் மகன்கள் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை. கடந்த 19ம் தேதி செல்வராஜ் உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டபோது போலீசார், சரியாக சரியான பதிலளிக்காமல் செல்வராஜை தரக்குறைவாக திட்டி உள்ளனர். இதனால் மனம் நொந்துபோன செல்வராஜ், தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தீ வைத்துக் கொண்டார்.

உடலில், 50 சதவீத தீக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஇவர் , உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.