ஸ்ரீரங்கத்தில் ஒலிக்கும் அடி மனை பிரச்சனை !

0

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் சார்பில் பழனியாண்டி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

பிரச்சாரத்தின் போது ஸ்ரீரங்கம் மக்களுக்கு நீண்ட நெடுங்காலமாக உள்ள அடிமனை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். வரகூடிய திமுக அரசில் அதை கண்டிப்பாக நிறைவேற்றி தருவோம் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்து வருகிறார்.

‌சந்தா 1
சந்தா 2

மற்றொருபுறம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அதிமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதியில் வலம் வருகிறார்.

இந்த நிலையில் கு.ப.கிருஷ்ணன் அந்த பகுதி மக்களிடையே பல்வேறு கோரிக்கைகளை கூறி, அதை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார். மேலும் அடிமனை பிரச்சினைக்கு கண்டிப்பாக தீர்வு காணப்படும் என்றும் கு.ப.கிருஷ்ணன் செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.