திருச்சியில் தொழில் நகரமாக மாற்றுவேன், இனிகோ இருதயராஜ் !

0
1

திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் திமுக வேட்பாளரான இனிகோ இருதயராஜ் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

உடன் திமுக நிர்வாகிகள் கூட்டணிக் கட்சியினர் என்று பலர் பங்கேற்றனர். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் இருதயராஜ், வாக்காளர்களிடம் திருச்சியை தொழில் நகரமாக மாற்றுவேன், மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், சாலை வசதி உள்ளிட்டவை சரி செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

2

மேலும் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை முடித்து வெளியே வந்தவுடன் வாக்கு சேகரித்தார். அந்தப் பகுதியில் உள்ள கோயில்களில்  இனிகோவிற்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.