திருச்சி தூய வளனார் கல்லூரியில் உன்னத் பாரத் -கிராம வளர்ச்சி பணிகள் குறித்த கருத்தரங்கம்

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரியில் உன்னத் பாரத் -கிராம வளர்ச்சி பணிகள் குறித்த கருத்தரங்கம்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உன்னத் பாரத இயக்கம் 2.0 உயர்கல்வி நிறுவனங்கள் வாயிலாக கிராம வளர்ச்சி பணிகளை செய்து கொண்டிருக்கிறது. தென்னிந்திய  மத்திய மண்டல ஒருங்கிணைப்பு நிறுவனமான கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது‌.

2

 

திருச்சி மாவட்டத்திலிருந்து 16 உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குவிரிவாக்கத் துறை இயக்குனர் மற்றும் யு பி ஏ வின் பங்கேற்பு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட் தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் தொடக்க உரையாற்றினார் மண்டல ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவகுமார் அவர்கள் சிறப்புரை வழங்கினார் மண்டல ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாலாஜி அவர்கள் கருத்துரை வழங்கினார்.

கள ஆய்வு திட்ட அறிக்கை தயார் செய்வது அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நிதியைக் கையாளும் விதம் போன்ற தலைப்புகளில் இக்கூட்டம் நடைபெற்றது.விரிவாக்கத் துறையின் ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் மற்றும் ஜெயச்சந்திரன் முறையே வரவேற்பும் நன்றியையும் கூறினார்கள்

லெனின் அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பூர்ண விஸ்வநாதன் அவர்கள் தொழில்நுட்ப உதவிகளை செய்திருந்தார்

3

Leave A Reply

Your email address will not be published.