திருச்சியில் சுகாதாரமற்ற குடிநீர் தயாரித்த நிறுவனத்திற்கு சீல்:

0
1

திருச்சியில் சுகாதாரமற்ற குடிநீர் தயாரித்த நிறுவனத்திற்கு சீல்:

திருச்சி சஞ்சீவி நகரில் இயங்கி வரும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனம் உரிமம் பெறாமலும், தரமற்ற தண்ணீர் பாட்டில்களை கொண்டும் உற்பத்தியில் ஈடுபடுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17.03.2021) அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில், சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் பழைய தண்ணீர் பாட்டில்களை உபயோகபடுத்தியதும்,  தெரியவந்தது. இதனையடுத்து, தரமற்ற தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சீல் வைத்து  மூடப்பயன்படும் மூடிகளை பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து, நிறுவனத்தின் உரிமையாளர் பால்ராஜ் என்பவர் வழக்குபதிவு செய்து அதிகாரிகள் நிறுவனத்தை இழுத்து மூடி சீல் வைத்தனர்.

2

மேலும், இதுதொடர்பாக உணவுப்பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ் கூறியதாவது: பொதுமக்களும், வணிகம் செய்பவர்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும், மேலும் காலவதி தேதி குறிப்பிட்ட பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், உண்வு சம்பந்தபட்ட கலப்பட புகார்களை 9944959595 , 9585959595 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.