100வீதம் வாக்களிக்க வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

0

100வீதம் வாக்களிக்க வலியுறுத்தி திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

திருச்சி ஜமால் முகமது தன்னாட்சிக் கல்லூரி யூத் ரெட் கிராஸ் அமைப்பு சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப் இணைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பேரணியானது ஜமால் முகமது தன்னாட்சிக் கல்லூரி வளாகத்தில் இருந்து திருச்சி தலைமை தபால் அலுவலகம் வரை சென்று கல்லூரி வளாகத்தை அடைந்தனர்.

சந்தா 2

‌சந்தா 1

நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜமால் முஹம்மது பிலால் செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜிமுதீன் பொருளாளர் ஜமால் முஹம்மது பிலால், துணை செயலர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முஹம்மது, துணைச் செயலர் அப்துஸ் சமத், இயக்குனர் அப்துல் காதர் நிக்கல், கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முஹைதீன், பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் கோபிநாத்,

மாவட்ட வருவாய் அலுவலர் விஸ்வநாதன், திருச்சி மேற்கு வட்டாட்சியர் ரமேஷ் யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி தலைவர் ராஜசேகரன், செயலர் ஜவகர் ஹசன், வழிகாட்டும் குழு உறுப்பினர் லாரன்ஸ், குணா, விஜயகுமார், வில்பர்ட் எடிசன், துணை முதல்வர் முஹம்மது இப்ராஹிம், கூடுதல் துணை முதல்வர் முஹம்மது சகாபுதீன், யூத் ரெட் கிராஸ் கமிட்டி அகஸ்டின், சிட்டிசன் கன்ஸ்யூமர் கிளப் உமர் சாதிக் உடன் கல்லூரி மாணவர்கள் வாக்களிப்போம் வாக்களிப்போம் ஜனநாயக முறைப்படி வாக்களிப்போம், ஓட்டுரிமை எனது உரிமை, எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல, மனதில் உறுதி வேண்டும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும், விற்காதே விற்காதே ஓட்டை பணத்திற்காக விற்காதே, வாக்களிக்க பணம் கொடுப்பதும் வாக்களிக்க பணம் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம், வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன், வாக்களிக்க தயார் என்பேன், கண்ணியத்துடன் வாக்களியுங்கள், உங்களது எதிர்காலத்தின் குரல் உங்கள் வாக்கு, 18 வயதில் வாக்கு பண்பட்டதாக நாட்டை ஆக்கு, போடுவோம் ஓட்டு வாங்க மாட்டோம் நோட்டு, நம் சமுதாய மாற்றம் நம் விரலில், வாக்கின் பலம் நாட்டின் நலம் என பதாகைகள் வைத்து கோஷமிட்டு பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.