திருச்சி தூய வளனார் கல்லூரியில் ஆசா அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு விழா

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரியில் ஆசா அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு விழா

திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத் துறை மற்றும் வரலாற்றுத் துறை இணைந்து மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆரோக்கியசாமி அவர்களின் நினைவாக அவரது துணைவியார்  கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்கள் நிறுவியிருக்கிற ஆசா அறக்கட்டளை சொற்பொழிவு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்று வருகிறது.

2

இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இவ்விழாவில் வரலாற்றுத்துறை பொறுப்பு துறைத்தலைவர் முனைவர் லிங்கம்மாள் வரவேற்புரையாற்றினார். இக்கல்வியாண்டிற்கான அறக்கட்டளை பொறூப்பாளர் முனைவர் இராசாத்தி அறக்கட்டளை அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் அருள்தந்தை சேவியர் ஆரோக்கியசாமி அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி, வழக்கறிஞர் சூ.மார்டின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் பரிசு பெற்ற திருச்சி தேசியக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, வேட்டவலம் லயோலா கல்லூரி, புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியர் முனைவர் ஆ.குழந்தை வீரமாமுனிவரின் ஆளுமைகள் என்கிற மையப்பொருளில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

நிறைவில் வளனார் தமிழ்ப் பேரவை பொறுப்பாளர் முனைவர் போ.ஜான்சன் நன்றியுரையாற்ற இருக்கிறார். முனைவர் ஆய்வு மாணவர் பா.எழில் செல்வன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். இவ்விழாவில் பரிசு பெற்றுள்ள வேட்டவலம் லயோலா கல்லூரி, திருச்சி தேசிய கல்லூரி மாணவர்கள் உட்பட, தூய வளனார் கலலூரி தமிழ் மற்றும் வரலாற்றுத்துறை இளங்கலை, முதுகலை மாணவர்கள், பேராசிரியர்கள், திரு.ஆசா அவர்களின் குடும்பத்தினர், தமிழ் ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.