சென்னை சிலம்ப போட்டியில் அசத்திய, திருச்சி மாணவ மாணவிகள் !

சென்னையில் நடைபெற்ற 8 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்சியை சேர்ந்த 16 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதில் 12 தங்கம் 3 வெள்ளி 9 வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர் .சிலம்ப போட்டியானது 6 பிரிவுகளில் நடைபெற்றது. சிலம்பம் தனி திறமையில் மனோஜ் குமார், உதய பிரகாஷ், சரணேஷ் குமார், ஸ்ரீசரம் ,சுகிதா மற்றும் மங்கல லட்சுமி முதல் பரிசும் ஹரிஹரசுதன் இரண்டாம் பரிசும் லோகேஷ்வர் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.
மேலும் கம்புச் சண்டை பிரிவில் சுகிதா, மனோஜ் குமார், லோகேஷ்வர்,நித்திஷ் ,முகமது ஐயன் மற்றும் எஸ்வந்த் விஜய் முதல் பரிசும் மோனிகா மோனிஷ் மற்றும் ஹரிஹரசுதன் இரண்டாம் பரிசும் மங்கல லட்சுமி, உதய பிரகாஷ் ,தமிழினியன், கிஷான்,சஞ்சீவி ஸ்ரீ, ஸ்ரீ சரண், கிருஷாந்த் மற்றும் சரனேஷ் குமார் மூன்றாம் பரிசும் பெற்றுள்ளனர்.

இந்த சிலம்பக் கலையை நவல்பட்டு காவல் பயிற்சி பள்ளியை சேர்ந்த 56 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த காவலர் அரவிந்த் என்பவர் எந்த வித கட்டணமும் இன்றி கற்றுக் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
