தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தமழர் அறிவியக்கப் பேரவை சார்பில்  தா.பாண்டியன் நினைவேந்தல்

0
gif 1

கூட்டத்தில் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் தோழர் M.செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்டச் செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார் வரவேற்புரையாற்றினார். தமிழர் அறிவியக்கப் பேரவை நிறுவுநர் தோழர் குறள் மொழி முன்னிலை வகித்தார். புலவர் ந.முருகேசன் தொடக்கவுரையாற்றினார். நினைவேந்தல்

சிறப்புரை இந்திரஜித் ஆற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் அண்மையில் காலமான ஈரோடு மக்கள் மருத்துவர் ஜீவானந்தம், அறிவியல் தமிழறிஞர் இராமசுந்தரம், திரைப்பட இயக்குநர் S. P. ஜனநாதன் மற்றும் காரல் மார்க்ஸ் நினைவுநாள் மவுன அஞ்சலி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

gif 4

நினைவேந்தல் சிறப்புரையில் தோழர் இந்திரஜித் தனது உரையில்
மார்க்சியத்தின் நுழைவுவாயில் பெரியாரிசம் என்று முழங்கியவர் தா.பாண்டியன், தனது உரையை படுத்தறிவுடன்தான் தொடங்குவார் வாழ்நாள் முழுதும் நடமாடும் புத்தகச்சாலையாய் திகழ்ந்தவர். காலந்தோறும் இளைஞர்களால் ஈர்க்கப்பட்டவர். பேராசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், வழக்கறிஞர், கட்சியின் பொதுச்செயலர், கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச்செயலாளராக பேராசான் ஜீவாவால் அடையாளப்படுத்தப்பட்டவர். களப் போராளி, சிந்தனைமிக்க நாவன்மையாளர்.
ஊரடங்கு காலத்திலும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பல நூல்களை எழுதி வெளியிட்டவர்.

gif 3

அவர் இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு கிடைத்த அறிவுப் புதையல்.
மார்க்சியத்தை சாமானியனுக்கும் எளிமையாக விளக்கியவர்.
அவருடைய உரையில் வரலாறு, அறிவியல், படுத்தறிவு, சமகாலம், எதிர்காலம் இருக்கும். தனது கடைசி காலத்திலும் பாரதிதாசன் நமது கவிஞர் என்ற நூல் எழுத விரும்பினார். அது நிறைவேறாமல் போயிற்று. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் சக்கர நாற்காலியில் வந்து மதுரை மாநாட்டில் பேசிய ஐந்து நிமிட உரை மிகச்சிறப்பு வாய்ந்தது. இது பெரியார் மண், வகுப்புவாத சக்திகளை ஒரு போதும் அனுமதிக்ககூடாது என்றார். உயிருள்ளவரை தன் நாவால் தமிழகத்தை தட்டி எழுப்பியவர் தோழர் தா.பாண்டியன் என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் அறிவியக்கப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.