திருச்சியில் தந்தையை காப்பாற்றி மகன் மரணம் !

0

திருச்சி மாவட்டம் சமயபுரம் கூத்தூர் குடித்தெருவைச் சேர்ந்த முஸ்தபாவின் மகன் சபியுல்லா வயது 24 இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். மேலும் சபியுல்லா விற்கு திருமணத்திற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் பெண் பார்க்க வரும் நிகழ்ச்சிக்காக சபியுல்லாவும், அவரது தந்தை முஸ்தபாவும் இணைந்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது முஸ்தபா மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. அப்போது சபியுல்லா தந்தையை காப்பாற்ற முயற்சித்துள்ளார். அந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து சபியுல்லா தூக்கி வீசப்பட்டார்.

சந்தா 2

இது தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சபியுல்லா இல்ல மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உடலுக்கு உடனடியாக பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Leave A Reply

Your email address will not be published.