மன்னித்து, மன்னிப்பைப் பெறு!|

0
1

 

மன்னித்து, மன்னிப்பைப் பெறு!|

 

வேத வாசிப்பு: மத்தேயு 18:21-35*

2

நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் (மத்.18:35).

நாம் எப்போதெல்லாம் பாவ அறிக்கை செய்கிறோமோ, அப்போதெல்லாம் உடனடியாகவே தேவன் நம் பாவங்களை நமக்கு மன்னித்து விடுதலையைத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், நமக்கு விரோதமாகத் தவறு செய்தவர்கள் அதை உணர்ந்து மன்னிப்புக் கேட்டாலும், மன்னிப்புக் கொடுக்க பின்நிற்பதை என்றைக்காவது உணர்ந்திருக்கிறோமா? மன்னிப்பைப்பெறும் நாம் மன்னிக்கத் தயங்குவது ஏன்?

இன்றைய தியானப்பகுதி நமக்கு வலியுறுத்துவது ஒன்றுதான். நாம் நமக்கு விரோதமாக பாவம் செய்யும் சகோதரர் குற்றங்களை மன்னிக்காமற்போனால் நமது பரமபிதாவும் அப்படியே செய்வார். இயேசு நமக்குக் கற்றுத்தந்த மாதிரி ஜெபத்திலே, “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிப்பதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” என்றே கூறினார். இதை எத்தனை பேர் உணர்ந்தவர்களாய் ஜெபத்தை ஏறெடுக்கிறோம்? இங்கே பேதுரு இயேசுவிடம் வந்து மன்னிப்பதற்கு ஒரு கணக்குக் கேட்கிறார். இத்தனை தடவைகள் மன்னித்தாற் போதுமா? ஆண்டவர் நம்மைப் பார்த்து அப்படியொரு கணக்குக் கேட்பாரே யாகில் நமது பதில்தான் என்ன? எத்தனை தடவைகள் நான் உனக்கு மன்னித்தால் நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்வதை நிறுத்துவாய் என்று ஆண்டவர் நம்மைப் பார்த்துக் கேட்டால், நாம் அதற்கு ஒரு கணக்கைச் சொல்லத்தான் முடியுமா? நாம் அவருக்கு விரோதமாகச் செய்யும் பாவங்களுக்கு அளவே இல்லையே! ஆனாலும் மன்னிப்பதற்கு அவர் தயை உள்ளவரல்லவா!

தேவனிடத்தில் தாராளமாகவே நாம் மன்னிப்புப் பெற்றுக்கொண்டது மெய்யானால், மற்றவர்களை மன்னிப்பது நமக்குக் கடினமாக இருக்காது. இயேசு சிலுவையில் தொங்கிய வேளையிலும், வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்த வேளையிலும், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்; தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” என்றவர் நமது ஆண்டவர். அவரது பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் இந்த லெந்து நாட்களில் மன்னிப்பைக் கொடுக்க முன்வருவோம். இன்று நாம், யாரை மன்னிக்க முடியாமல் தவிக்கிறோம்? அவர்களை மனப்பூர்வமாய் இன்றே மன்னிப்போம். அவர்கள் நமக்கு எவ்வளவு தீமைகளென்றாலும் செய்திருக்கட்டும். இன்றும் நம்மைக் குறித்து பொறாமையோடு இருக்கட்டும். நாம் அவர்களை மன்னிப்போம்.

நான் யாரை வேண்டுமானாலும் மன்னிபபேன் ஆனால் அந்த குறிப்பிட்ட நபரை அந்த ஒரு சிலரை என்னால் மன்னிக்கவே முடியாது என்று ஒரு சில நல்ல கிரிஸ்தவர்கள் ஊழியக்காரர்கள் கூட கூறுவதுடன் அந்த குறிப்பிட்ட நபர்கள் ஒருகால் ஆண்டவரின் கிருபையால் இரட்சிக்கபட்டு பரலோகம் வந்துவிட்டால் அந்த பரலோகமே வேண்டாம். நரகத்திற்கு செல்ல தயார் என்று கூறுவது மிகவும் வேதனைக்குரியது.

இந்த அழிந்துபோகிற உலகம் ,உடல் உணர்வுகளுக்காக நித்தியத்தை இழக்க தயார் என்று கூறும் நீர் மூடர்களாய் நாம் இருக்க வேண்டாம். ஒருவேளை சாப்பிட்டிற்காக தன் சேஷ்டபுத்திரபாக்கியத்தை இழந்துபோன ஏசாவின் சந்ததியாய் நாம் இருக்க வேண்டாம்.

கிரிஸ்தவ சிஷத்துவ வாழ்க்கையில் பல முடிவுகள் நாம் விரும்புவதாக இருக்காது.

மன்னித்தல் என்பது ஏதோ ஆண்டவர் தீடிரென இருதயத்தில் ஊற்றுகிற ஆற்றல் அல்ல.

அல்லது காலப்போக்கில் தானாக வரக்கூடிய பண்பும் அல்ல.

மன்னிப்பு என்பது நம் கிறிஸ்துவின் அன்பினை சுயசிந்தனையில் உணர்ந்து நாமாகவே முன்வந்த முடிவெடுத்து
செயல்முறையில் அப்பியசப்படுத்த வேண்டிய கிறிஸ்துவின் நடைமுறை அன்பு.

It is matter of our willful choice.
இது உன் பெருமையையும் சுயநீதியையும், மன கடினத்தையும், கசப்பையும் வைராக்கியத்தையும சுக்குநூறாக உடைத்தெரியும் ஒரு அமைதியான வெடிகுண்டு.

 

 

இந்த அமைதியான வெடி குண்டு வெடிக்கும் போது நாம் நம்மை சுற்றி கட்டியுள்ள சுயம், பெருமை, சுயநீதி, கசப்பு, வைராக்கியம், கோபம், மன கடினம் சுய அன்பு , ஈகோ போன்ற கோட்டைகள் தவிடு பொடியாகும்.
இதற்கு தானாகவே முன்வந்து ஒப்பு கொடுக்கும் கிரிஸ்தவர்கள்தான் கிரிஸ்துவின் உண்மை சிஷர்கள்.

மற்றவர்கள் எல்லாம் வெறும் போலி.

கிறிஸ்துவின் நாமத்தில்
பல அற்புதங்களை நிகழ்த்தும் பலருக்கு கூட தன்ன் பெருமையையும் சுயநீதியையும், மன கடினத்தையும், கசப்பையும் வைராக்கியத்தையும சுக்குநூறாக உடைத்தெரியும இந்த அனுபவத்திற்கு ஒப்பு கொடுப்பதற்கு விரும்புவதில்லை. என்னால் முடியவில்லை,

இது மிக கடினமான காரியம் என்று சொல்லி தட்டிக்கழிக்கமால், திறந்த மனதோடு கிரிஸ்துவின் அன்பிற்காக நான் மன்னிப்பை தர விரும்புகிறேன் என்று ஆண்டவரிடம் மனபூர்வமாய் சொல்லும்போது மிக லெகுவாக மன்னிக்க இயலும்.

மற்றொரு மிக முக்கியமான காரியம்
மன்னிப்பது என்பது மற்றவர் நன்மைக்காக அல்ல. உன் நன்மைக்காக ஏனென்றால் நீ அனைவரையும் மனப்பூர்வமாய் மன்னிக்கா விட்டால் நித்திய ஜீவன், பரலோகம் உனக்கு கிடைக்காது.

ஆகவே
ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் (எபே.4:32).

மன்னித்தல் என்பது ஆவிக்குரிய எல்லா வரங்களை காட்டிலும், மரித்தவனை உயிரோடு எழுப்பி காட்டும் அற்புதத்தை பார்க்கிலும் உயர்ந்தது, உன்னதமானது.

சுருக்கமாக கூறின் மன்னிக்க இயலாதவன் இரட்சிக்கபடவில்லை என்றுதான் அர்த்தம்.

ஆண்டவரின் அன்பினால் தொடபட்டு இரட்சிக்கபட்ட எவரும் மன்னிக்க தயங்கமாட்டார்கள்.

ஒட்டுமொத்த கிரிஸ்தவ போதனைகளில் ஆவிக்குரிய முதிர்ச்சியின் உச்சத்தை அடைந்துவிட்டதின் ஒரு சில அடையாளங்களில் முதன்மையானது யாரையும் எளிதில் மன்னித்துவிடும் மனப்பான்மை.ஏனென்றால்
கிரிஸ்து என்கிற பெயருக்கு மறுபெயர் மன்னிப்பு தானே..

ஜெபம்: எங்கள் பாவத்தின் தோஷத்தை மன்னித்த ஆண்டவரே, எங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கும் நாங்கள் மன்னிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குப் பெலன் தரும்படியாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.

3

Leave A Reply

Your email address will not be published.