திருச்சியில் பேருந்து மற்றும் வேன் மோதி விபத்து

0

திருச்சியில் பேருந்து மற்றும் வேன் மோதி விபத்து

திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் ரயில்வே கேட் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நேற்று (10.03.2021) வேன் மோதி 10க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளார்கள். இதுகுறித்து கொடியாலம் ஊர்மக்கள் கூறுகையில், கரூரிலிருந்து திருச்சிக்கு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்த வேளையில் திருச்சியில் இருந்து கரூருக்கு சென்ற வேன் பேருந்தின் பின்பக்கம் இடித்து கட்டுப்பாட்டை இழந்து கொடியாலம் ரயில்வே கேட் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதியது. இதில் ஒன்பதாவது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் காயம் அடைந்து உள்ளார்கள்.

சந்தா 2

‌சந்தா 1

ஆறுமுகம் படுகாயம் அடைந்து திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை விபத்து மற்றும் உயர் மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார். ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Leave A Reply

Your email address will not be published.