வண்ணவிளக்குகளால் ஒளிர்ந்த தி.மு.க. பொதுக்கூட்ட டிஜிட்டல் மேடை :

0
1

வண்ணவிளக்குகளால் ஒளிர்ந்த தி.மு.க. பொதுக்கூட்ட டிஜிட்டல் மேடை :

தி.மு.க. பொதுக்கூட்டத்தில் 3 பிரமாண்ட மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன . நடுவில் அமைக்கப்பட்ட மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , துரைமுருகன் உள்பட முன்னணி நிர்வாகிகள் அமர்ந்தி ருந்தனர் . அந்த மேடையில் பெரியார் , அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்கள் மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது . இடது பக்க மேடையில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.பி. , எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்தி ருந்தனர். வலதுபக்க மேடையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அமரவைக்கப்பட்டிருந்தனர் .

பொதுக்கூட்ட மேடையில் ஹை – டெக் பாணியில் மு.க.ஸ்டாலின் நடந்துகொண்டே பேசினார் . இதற்காக மேலைநாடுகள் போன்று 500 அடி நீளத்துக்கு மேடையில் பிரத்யேக நடைபாதை அமைக் கப்பட்டிருந்தது .

2

3 மேடைகளும் எல்.இ.டி. திரைகளுடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது . மேடையில் இருபுறங்களிலும் தலா 500 அடிநீளத்துக்கு எல்.இ.டி. திரை வைக்கப்பட்டிருந்தது . மேடைகளில் விடியலுக்கான முழக்கம், ஸ்டாலின் தான் வர்ராரு…. விடியல்தான் தரப்போறாரு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.  ஸ்டாலின் தான் வர்ராரு…. விடியல்தான் தரப்போறாரு  என்ற பிரச்சார பாடலும் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது .

3

Leave A Reply

Your email address will not be published.