இந்தியாவிலே அதிக முறை கட்சி மாறியவர் யார் தெரியுமா?

தற்போது மக்கள் நீதி மையத்தில் ஐக்கியமாகி உள்ள பழ.கருப்பையா. அரசியலில் பல்வேறு வகையான கருத்தியலை அதாவது முரணான எதிரெதிர் திசை கொண்ட கருத்தியல் கொண்ட அரசியல் கட்சி, எதிரி எதிரான அரசியல் கட்சிகள் என்று அரசியலில் பல்வேறு அங்கங்களில் பயணித்தவர்.
பழ.கருப்பையா ஆரம்ப காலத்தில் காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா பார்ட்டி, ஜனதா தளம், திமுக, மதிமுக, அதிமுக பிறகு மீண்டும் காங்கிரஸ், அதற்கு அடுத்து அதிமுக, மீண்டும் திமுக என்று அரசியல் பல அரசியல் கட்சிகள் அங்கம் வகித்து விட்டு தற்போது குடியேறி உள்ள இடம் மக்கள் நீதி மையம்.

இவ்வாறு ஒவ்வொரு கட்சி மாறும் போதும் ஒவ்வொரு காரணங்களை முன்வைத்து அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி மற்றொரு கட்சிக்கு செல்லும் பழ.கருப்பையா, மக்கள் நீதி மையத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது காங்கிரஸை மக்கள் நீதி மைய கூட்டணியில் இணைக்க அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
