கலைக் காவேரி கல்லூரியில் சாதனை பெண்களுக்கு விருது !

0
1

கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி பாலின மன்றம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் சாமிநாதன் தலைமை வகித்தார். முதல்வர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குற்றவியல் நீதிபதி திரிவேணி, நாட்டுப்புறக் கலைஞர் திருநங்கை கே.வர்சா ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் நீதிபதிக்கு சிறந்த சாதனைப் பெண்மணி விருது – 2021 மற்றும் வர்ஷாவிற்கு சிறந்த மக்கள் கலைஞர்- 2021 விருதினை கல்லூரி இயக்குநர் வழங்கி சிறப்பித்தார்.

2

பாலின மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் வரவேற்புரையாற்றி நிகழ்வை ஒருங்கிணைத்தார். ஆக்னஸ் சர்மீளி நன்றி கூறினார். முதுகலை நடன மாணவி ரூபாவதி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

3

Leave A Reply

Your email address will not be published.