தி.மு.க. பொதுகூட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும் குவிந்த தொண்டர்கள்

0
1

தி.மு.க. பொதுகூட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலும் குவிந்த தொண்டர்கள்

திருச்சி அருகே சிறுகனூரில் திறந்த – வெளியில் தி.மு.க. பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் நேற்று (7.03.2021) மாலை 4 மணிக்கு தொடங்கியது . பொதுக்கூட்ட திடலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. தொண்டர்கள் கார் , வேன் , பஸ் என வாகனங்களில் காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர் .

வெயிலின் கொடுமையில் இருந்து விடுபடும் வகையில், திமுகவினர் சார்பில் தொப்பிகள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

2

நாற்காலிகளை குடையாக்கிய தொண்டர்கள்:

பொதுக்கூட்ட மேடை எதிரே முக்கிய நிர்வாகிகள் , தொண்டர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டி ருந்தது . கலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் , நீண்ட நேரமாக நாற்காலியில் அமர்ந்திருந்த தொண்டர்களால் சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல்   ஒரு கட்டத்தில் நிழலுக்காக தாங்கள் அமர்ந்திருந்த நாற்காலிகளை தலையில் தூக்கி வைத்து குடைபோல மாற்றி கொண்டு ஆரவாரம் எழுப்பினர். இதனால் , பொதுக்கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .

3

Leave A Reply

Your email address will not be published.