திருச்சியில் இரயில்வே ஊழியர் தற்கொலை:

திருச்சியில் இரயில்வே ஊழியர் தற்கொலை:
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (51). இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று (4.03.2021) பாலக்கரை ரயில் நிலைய நடைமேடையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அண்ணாதுரையின் பாக்கெட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதில் தனக்கு ரத்த கொதிப்பு நோய் உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் எழுதப்பட்டு இருந்தது. இக்கடிதத்தின் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்தது.

இதனையடுத்து அண்ணாதுரையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
