திருச்சி விமானநிலையத்தில் பெண் கடத்தல்:

0

திருச்சி விமானநிலையத்தில் பெண் கடத்தல்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரன் தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடைய பெண் துபாயில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று (4.03.2021) துபாயில் இருந்து விமானத்தில் திருச்சி வந்தார். அப்போது அந்த பெண்ணை விமான நிலையத்தில் 6 பேர் கொண்ட கும்பல் காரில் சத்திரம் பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு கடத்தி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சந்தா 2

விசாரணையில் துபாயில் அந்த பெண்ணிடம் தங்க நகைகளைக் கொடுத்து அதை திருச்சி விமான நிலையத்தில் வரும் நபர்களிடம் ஒப்படைக்குமாறு தன்னை வற்புறுத்தியதாகவும், தங்கம் அதிகளவு எடை இருந்ததால் மறுத்து விட்டதாகவும் கூறினார்.

‌சந்தா 1

இதனையடுத்து திருச்சி கம்பரசம்பேட்டை கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த முபாரக், பழைய கரூர் சாலையில் இருந்த சாகுல் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். துபாயிலிருந்து அப்பெண் தங்கம் கடத்தி வந்தரா என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.