தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி அவசியம்: மாவட்ட ஆட்சியர்:

0
1

தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி அவசியம்: மாவட்ட ஆட்சியர்:

Helios

சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் காவல்துறையினர், ராணுவ வீரர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் covid-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான சு.சிவராசு கூறியதாவது:

2

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அரசு பொது மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் ஈடுபடுவோர் இரண்டு சுற்று covid – 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

இதன்படி , திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை , ஸ்ரீரங்கம் , லால்குடி , முசிறி , துறையூர், மணப்பாறை , திரு வெறும்பூர் , தொட்டியம் , துவரங்குறிச்சி ஆகிய அரசு மருத்து வமனைகள் , இனாம்குளத்துார் , காட்டுப்புத்துார் , குழுமணி , புதுார் உத்தமனுார் , புள்ளம்பாடி , புத்தாநத்தம் , சிறுகாம்பூர் , தண்டலைப்புத்துார் , தாத்தையங்கார் பேட்டை , உப்பிலியபுரம் , வையம்பட்டி , வளநாடு , வீரமச் சான்பட்டி , நவல்பட்டு ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் , காந்திபுரம் , காட்டூர் , சுப்ரமணியபுரம் , பெரிய மிளகு பாறை , உறையூர் , தெப்பக்குளம் ஆகிய நகர்நல ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கூறினார்.

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் நேற்று (4.03.2021) இரண்டாம் கட்ட தடுப்பூசியை திருச்சி அரசு மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.