சிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது

0
D1

சிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது

N2

திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தர்ஷன். இவர் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் 17 வயது பெண் கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்ஷன் மாணவி கடத்தி விட்டதாக புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தர்சன் கடத்திச்சென்ற மாணவியை திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.  இதனையடுத்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக போக்சோவில் தர்சனை போலீசார் கைது செய்தனர்.

 

N3

Leave A Reply

Your email address will not be published.