திருவெறும்பூரின் மைந்தன் எம்.முருகானந்தம் !
MMM என்று சொல்லப்படக்கூடிய எம்.முருகானந்தத்தை திருச்சியில் பலரும் அறிந்திருப்போம். எங்கு திரும்பினாலும் முருகானந்தத்தின் படம், பெயர் என்று மக்கள் நீதி மையத்திற்கான அரசியல் களத்தை திருச்சியில் உருவாக்கியவர் முருகானந்தம். இதனாலேயே மக்கள் எம்.முருகானந்தத்தை பற்றி அறிய விரும்பினர்.
திருவெறும்பூர் குமரேசபுரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இருந்து பிட்ஸ் பிலானி வரை சென்று கல்வி பயின்று ,தன் பெயரின் நீளத்திற்கு பல பட்டபடிப்புகளை ஆர்வத்துடன் படித்தவர். தனக்கு பதினெட்டு வயதிருக்கும்போது ரோட்டரி குடும்பத்தில் ரோட்ராக்டராக சேர்ந்து பின்னர் 2016 -17 ஆம் ஆண்டு ரோட்டரி மாவட்டம் 3000தின் இளம் ஆளுநராக பொறுப்பேற்றார். ஒரு சாதாரண தனியார் நிறுவன ஊழியராக பணியில் சேர்ந்து இன்று எக்செல் மாறி டைம் ,எக்செல் எனர்ஜி ,பீட்ஸ் ஜாப் போன்ற பல நிறுவனங்களை உள்ளடிக்கிய எக்செல் குழுமத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
பதினாறு வயதில் தொடங்கிய தனது சமூக பணியை இன்று தான் நிறுவிய அறக்கட்டளையான “தி எக்செல் ஃபவுண்டேஷன்” மூலமாக பல நலத்திட்ட உதவிகளை அரசு பள்ளிகளுக்கும், ஏழை மாணவர்களுக்கும் ,ஏழை எளிய மக்களுக்கும் செய்து வருகிறார். ரோட்டரி திட்டங்களுக்காக தனது உழைப்பின் மூலம் “தி ரோட்டரி ஃபவுண்டேஷனிற்கு 2.5கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளார்.
தற்போது புதிய அவதாரமாக அரசியலில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து பொதுச் செயலாளராக மக்களுக்கு பணியாற்றி வருகிறார். விடாமுயற்சி, திட்டமிடல், கடின உழைப்பு இவனைத்தும் வெற்றிக்கான திறவுகோல்கள் என்பதற்கேற்ப சாதாரண கிராம பஞ்சாயத்து பள்ளியில் தொடங்கி இன்று EXCEL Group என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார் நம்ம ஊரை சேர்ந்த எம்.முருகானந்தம்.
மேலும் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவரம்பூர் தொகுதியில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.