திருச்சியில் பெண்  டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை !

0
gif 1

திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகாநகரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவருடைய மனைவி கார்த்திகா (வயது 26). இருவரும் பல் டாக்டர்கள். இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

 

கணவன்-மனைவி இருவரும் தென்னூர் பகுதியில் பல் மருத்துவமனை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவு இருவரும் குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவை பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.

 

தூக்குப்போட்டு தற்கொலை 

 

gif 3
gif 4

இந்தநிலையில் 02.03.2021 காலை விக்னேஷ்வரன் மனைவி கார்த்திகாவை மருத்துவமனைக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்ததால் விக்னேஷ்வரன் மட்டும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பின்னர் 02.03.2021 பகல் 2.30 மணி அளவில் அவர் பணி முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டினுள் கார்த்திகா தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்டு விக்னேஷ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவருக்கு திருமணமாகி ஓராண்டு மட்டுமே ஆவதால் திருச்சி ஆர்.டி.ஓ. விசுவநாதனும் விசாரணை நடத்தி வருகிறார்.

 

gif 2

Leave A Reply

Your email address will not be published.