திருச்சியில் 2 1/2 டன்  கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்:

0

திருச்சியில் 2 1/2 டன்  கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்:

திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள செம்பட்டு சோதனை சாவடியில் 2 1/2 டன் ரேஷன் அரிசி நேற்று (3/03/2021) போலீசாரால் கைப்பற்றப்பட்டது

சந்தா 2

தேர்தல் நடத்தை விதிமுறை அமலை தொடர்ந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (3.3.2021) இரவு 7 மணி அளவில் திருச்சி செம்பட்டு செக்போஸ்ட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தில் சோதனை மேற்கொண்ட போது அதில் 55 மூட்டைகளில் 2 1/2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

‌சந்தா 1

சரக்கு வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டு தப்பி ஓடி விட்டனர், வாகனத்தின் டிரைவரான சுரேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுகாம்பூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்

 

Leave A Reply

Your email address will not be published.