திருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:

திருச்சியில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்:
திருச்சி விமான நிலையத்தில் ரூ.40லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் நேற்று (3/03/2021) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

நேற்று (3/03/2021) துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளிடம் சுங்கத் துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான 850 கிராம் தங்கத்தை உள்ளாடையில் மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து,சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
