கலைஞரின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார் தொழிலதிபர் இனிகோ இருதயராஜ்

0

கலைஞரின் கடிதங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார் தொழிலதிபர் இனிகோ இருதயராஜ்

கலைஞரின் கடிதங்கள் ஏற்படுத்திய அரசியல் சமூகத் தாக்கங்கள் என்கிற தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்கான தலைப்பைப் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டு வந்தார் திருச்சி தொழிலதிபர் இனிகோ இருதயராஜ்.

இனிகோ இருதயராஜ்
‌சந்தா 1

சென்னை லொயோலா கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் டோ.டேவிட் ஸ்டான்லி ஆய்வு நெறியாளரும், சமூகப்பணி துறைப் பேராசிரியர் முனைவர் கிளாட்சன் சேவியர் இணை நெறியாளராகவும் இருந்து இந்த ஆய்வை மேற்கொள்ள வழி காட்டினர்.

சந்தா 2

அவருடைய ஆய்வின் மீதான பொது வாய்மொழித்தேர்வு லொயோலா கல்லூரியில் 02.03.2021 நடைபெற்றது.

சென்னைப் பல்கலைக் கழக தமிழியல் துறைத் தலைவர் முனைவர் கோ‌.பழனி புறத்தேர்வாளராக வருகை தந்தார்.

ஆய்வாளர் தம் ஆய்வைத் குறித்து 30 நிமிடம் விளக்கிக் கூறினார். தொடர்ந்து, பார்வையாளர்கள் ஆய்வு குறித்து எழுப்பிய அனைத்துத் வினாக்களுக்கும் தெளிவான வகையில் தம் பதில்களை அளித்தார். அதைத்தொடர்ந்து புறத்தேர்வாளர், இவருக்கு முனைவர் பட்டம் வழங்கலாம் என பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரை செய்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் தொழிலதிபர்கள் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலர் இவ்வாய்மொழித் தேர்வில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.