திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து திமுக தொண்டர் பலி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத் அலி என்பவர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்ததையொட்டி இப்பகுதியில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் திமுக தொண்டரான ரஷீத் அலி ஈடுபட்டிருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பத்தை அகற்றும் போது எதிர்பாராத விதமாக வேலை இருந்த மின் கம்பம் ரஷீத் அலி மீது சாய்ந்தது

இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் ஆனால் அங்கு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்
தகவல் அறிந்து வந்த போலீசார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
