திருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

0
D1

திருச்சியில் மத்திய ஆயுதப்படை வீரர்கள் கொடி அணிவகுப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி  நடைபெறும் சட்டமன்ற தேர்தலையொட்டி  பாதுகாப்பு பணிக்காக திருச்சிக்கு மத்திய ஆயுதப் படை வீரர்கள் வந்துள்ளனர்.

N2

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவ வீரர்கள், ஆயுதப்படை போலீசார் திருச்சியில் நேற்று (2.03.2021) கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்நிகழ்வை துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி, வேதரத்தினம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  இதில் 140க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். இந்த கொடி அணிவகுப்பானது திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி புத்தூர் சாலையில் முடிவடைந்தது.

D2

இதேபோல, மத்திய எஸ்.எஸ்.பி. பிரிவைச் சேர்ந்த 96 பேர் காட்டூர் பாலாஜி நகரில் இருந்து திருவெறும்பூர் வரை கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். இக்கொடி அணிவகுப்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமை வகித்தார்.

N3

Leave A Reply

Your email address will not be published.