திருச்சியில் கொலைவழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது:

0
1

திருச்சியில் கொலைவழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது:

திருச்சி அரசு மருத்துவமனை அருகே நேற்று (1.03.2021) சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில்,  அவரிடம் 3 1/2  கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

2
4

விசாரணையில், இவர், 2019 ஆண்டு கொலை வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்று தலைமறைவானவர், மேலும், நேற்று முன்தினம் புத்தூர் நாலு ரோட்டில் உள்ள டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி 1000 ரூபாய் பணம் பறிக்க முயன்றவர் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

3

Leave A Reply

Your email address will not be published.