திருமண மண்டபம், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்: திருச்சி மாவட்ட ஆட்சியர்

0
gif 1

திருமண மண்டபம், விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்: திருச்சி மாவட்ட ஆட்சியர்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (1.03.2021) திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள், இதர சமுதாய கூடங்களின் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை தொடர்பான அறிவுரை வழங்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:

gif 3
gif 4

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது திருமண மண்டபம், தங்கும் விடுதி, சமுதாயக்கூடம் ஆகியவை அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கு வாடகைக்கு அளிக்கும்போது விவரங்களை உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் திருமண மண்டபங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள், வேட்டி, சேலைகள் வழங்குவது வழகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது முற்றிலும் தடை செய்யபட்டுள்ளது.

கல்யாண மண்டபங்களில் போலியான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும். எனவே திருமண மண்டபங்களில் முன்பதிவு செய்ய வருபவர்களிடம் முறையான ஆதாரங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். முன்பதிவு குறித்த விவரங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தில் தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் திருமண மண்டப தங்கும் விடுதிகள் மற்றும் இதர சமுதாயக் கூடங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.