திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்க பெட்டிகள்:

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்க பெட்டிகள்:

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. இதனையடுத்து குறைதீர் நாள் முகாம், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஆகியவை நடைபெறாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் குறைதீர் நாளான நேற்று மனுக்கள் பெறும் பிரிவு வெறிச்சோடி கிடந்தது. குறைதீர் நாள் ரத்தானது அறியாமல் வந்தவர்கள் அங்கிருந்த பெட்டியில் மனுவை போட்டு சென்றனர். ஆட்சியிர் அலுவலக நுழைவு வாயிலிலும் மனுக்கள் போடுவதற்காக பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அவரச அவசியம் கருதி அளிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் இமெயில் முகவரியை மாவட்ட அலுவலகத்திற்கு வந்தவர்களிடம் காவல்துறையினர் அளித்தனர்.
