மார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மார்ச் 15,16 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
வங்கிகளை தனியார் மயமாக்கலை கண்டித்து மார்ச் 15 16ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரிகள் சங்க பொது செயலாளர் தெரிவித்துள்ளார்

கனரா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் மண்டலங்களுக்கு இடையேயான மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் வங்கி அதிகாரிகள் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் மணிமாறன் கூறியதாவது:

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து வரும் 15 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தனியார் மயமாக்க படுவதை தடுத்து நிறுத்த முடியும் என்று கூறினார்
